Thursday, 19 June 2014

அமைதியான நதியினிலே ஓடும், Amaidhiyana nadhiyinile odum


--------------------------------------------------------------------------
படம் : ஆண்டவன் கட்டளை
பாடியவர்கள் : T.M. சௌந்தராஜன் , P. சுசீலா
இசை :M.S விஸ்வநாதன்
பாடல் வரிகள் :
கவிஞர் கண்ணதாசன்
--------------------------------------------------------------------------

அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் 

கலங்க வைக்கும் இடியினிலும் 
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்

தென்னை இளங்கீற்றீனிலே.............
தென்னை இளங்கீற்றீனிலே தாலாட்டும் தென்றல் அது(2)
தென்னை தனை சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது(2)


அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

 
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணல் அது(2)
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை(2)


அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

 
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது(2)
நாணம் என்னும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மை இது(2)


அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்துவிடும்(2)
அன்புமொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்(2)


அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் 

கலங்க வைக்கும் இடியினிலும் 
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்

No comments:

Post a Comment