Tuesday, 17 June 2014
மல்லிகை என் மன்னன்,Malligai en mannan
-----------------------------------------------------
படம் : தீர்க்கசுமங்கலி
பாடகி : வாணி ஜெயராம்
இசை : M.S.விஸ்வநாதன்
பாடல் :கவிஞர் வாலி
------------------------------------------------------
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ'(2)
எந்நேரமும் உன்னாசை போல்
பெண் பாவை நான் பூச்சூடிக்கொல்லவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல் (2)
திங்கள் மேனியை தொட்டு தாலட்டுது
குளிர் காற்றிலே தளிர்ப் பூங்கொடி
கொஞ்சிப் பேசியே அன்பை பாராட்டுது
என் கண்ணன் துஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம் தான்
கையோடு நான் அள்ளவோ
என் தேவனே உன் தேவி நான்
இவ்வேளையில்
உன் தேவை என்னவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ.........
பொன் மாங்கல்யம் வண்ணப்பூச்சரம்
மஞ்சள் குங்குமம் என்றும் நீ தந்தது
ஓராயிரம் இன்பக்காவியம்
உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது
நம் இல்லம் சொர்க்கம் தான்
நம் உள்ளம் வெள்ளம் தான்
ஒன்றோடு ஒன்றானது
என் சொந்தமும் இந்த பந்தமும்
உன்னோடு தான் நான் தேடி கொண்டது
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ'
எந்நேரமும் உன்னாசை போல்
பெண் பாவை நான் பூச்சூடிக்கொல்லவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ..........
Subscribe to:
Post Comments (Atom)
Nice song
ReplyDeletemost beautiful and romatic ever
ReplyDeleteSuch a great romantic song
ReplyDeleteபூச்சூடிக்கொள்ளவோ
ReplyDeleteவாணி ஜெயராம் குரல் பாடலை எங்கேயோ கொண்டு செல்கிறது
ReplyDelete