Thursday, 19 June 2014
மலைக்காற்று வந்து தமிழ் பேசுதே, Malaikaatru vandhu tamizh pesudhey
--------------------------------------------------------------------------
படம் : வேதம்
பாடியவர்கள் : ஹரிகரன்,மஹாலெட்சுமி
இசை : வித்யாசாகர்
பாடல் வரிகள் : கவிஞர் வைரமுத்து
--------------------------------------------------------------------------
மலைக்காற்று வந்து தமிழ் பேசுதே
மழைச்சாரல் வந்து இசை பாடுதே
மலரோடு வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி
மலைக்காற்று வந்து தமிழ் பேசினால்
மழைச்சாரல் வந்து இசை பாடினால்
மலரோடு வண்டு உரையாடினால்
உன்னோடு நானும் பேசுவேன்
புல்லோடு இரவில் பனி தூங்குமே
சொல்லோடு கவியின் பொருள் தூங்குமே
கல்லோடு மறைந்த சிலை தூங்குமே
தூங்காது நமது தீபமே(2)
கடல் கொண்ட நீலம் கரைந்தாலுமே
உடல் கொண்ட ஜீவன் போனாலுமே
முடியாத அண்டம் முடிந்தாலுமே
முடியாது நமது பந்தமே(2)
மலைக்காற்று வந்து தமிழ் பேசுமா
மழைச்சாரல் வந்து இசை பாடுமா
மலரோடு வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி
இடையோடு ரெண்டு கரம் சேர்க்கிறேன்
என்னென்னவென்று சரிபார்க்கிறேன்
இதழ் தேனை மெல்ல ருசிபார்க்கிறேன்
இடைவேளை இல்லை தொடருவேன்(2)
கண்ணாளன் தீண்ட மடி சாய்கிறேன்
கண்ணோரம் காதல் பசி பார்க்கிறேன்
என் கூந்தல் பூக்கள் பரிமாறினேன்
இனி என்ன செய்வதறிகினேன்
இனியென்ன ம்ஹூம் ம்ஹூஹூம்
மலைக்காற்று வந்து தமிழ் பேசுதே
மழைச்சாரல் வந்து இசை பாடுதே
மலரோடு வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி
Subscribe to:
Post Comments (Atom)
correct lyrics thank you sir
ReplyDelete