Thursday, 19 June 2014

ஒரே நாள் உனை நான் , ore naal unai naan


--------------------------------------------------------------------------
படம் : இளமைஊஞ்சலாடுகிறது
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம் , வாணி ஜெயராம் 
இசை :இசைஞானி இளையராஜா
பாடல் வரிகள் : கவிஞர் வாலி

-------------------------------------------------------------------------- 
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை
தான்  ஊஞ்சல் ஆடுது 

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை நான்  ஊஞ்சல் ஆடுது 



மங்கைக்குள் காதம் எனும் கங்கைக்குள் நான் மிதக்க(2)
சங்கமங்களில் இடம்பெறும் 
சம்பவங்களில் இதம் இதம்
மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன


ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை நான்  ஊஞ்சல் ஆடுது 


நெஞ்சத்தில் பேரெழுதி கண்ணுக்குள் நான் படித்தேன் (2)
கற்பனைகளில் சுகம் சுகம் 

கண்டதென்னவோ நிதம் நிதம்
மழை நீ நிலம் நான் மயக்கமென்ன 


ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை தான்  ஊஞ்சல் ஆடுது 


பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க (2)
கண்ணிரண்டிலும் ஒரே ஸ்வரம் கையிரண்டிலும் ஒரே லயம்
இரவும் பகலும் இசை முழங்க


ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை
தான் ஊஞ்சல் ஆடுது 

அமைதியான நதியினிலே ஓடும், Amaidhiyana nadhiyinile odum


--------------------------------------------------------------------------
படம் : ஆண்டவன் கட்டளை
பாடியவர்கள் : T.M. சௌந்தராஜன் , P. சுசீலா
இசை :M.S விஸ்வநாதன்
பாடல் வரிகள் :
கவிஞர் கண்ணதாசன்
--------------------------------------------------------------------------

அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் 

கலங்க வைக்கும் இடியினிலும் 
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்

தென்னை இளங்கீற்றீனிலே.............
தென்னை இளங்கீற்றீனிலே தாலாட்டும் தென்றல் அது(2)
தென்னை தனை சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது(2)


அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

 
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணல் அது(2)
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை(2)


அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

 
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது(2)
நாணம் என்னும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மை இது(2)


அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்துவிடும்(2)
அன்புமொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்(2)


அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் 

கலங்க வைக்கும் இடியினிலும் 
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்

மலைக்காற்று வந்து தமிழ் பேசுதே, Malaikaatru vandhu tamizh pesudhey




--------------------------------------------------------------------------
 படம் : வேதம்
பாடியவர்கள் : ஹரிகரன்,மஹாலெட்சுமி
இசை : வித்யாசாகர்
பாடல் வரிகள் : கவிஞர் வைரமுத்து

--------------------------------------------------------------------------
 மலைக்காற்று வந்து தமிழ் பேசுதே
மழைச்சாரல் வந்து இசை பாடுதே
மலரோடு வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி


மலைக்காற்று வந்து தமிழ் பேசினால்
மழைச்சாரல் வந்து இசை பாடினால்
மலரோடு வண்டு உரையாடினால் 

உன்னோடு நானும் பேசுவேன்

புல்லோடு இரவில் பனி தூங்குமே
சொல்லோடு கவியின் பொருள் தூங்குமே
கல்லோடு மறைந்த சிலை தூங்குமே
தூங்காது நமது தீபமே(2)


கடல் கொண்ட நீலம் கரைந்தாலுமே
உடல் கொண்ட ஜீவன் போனாலுமே
முடியாத அண்டம் முடிந்தாலுமே
முடியாது நமது பந்தமே(2)


மலைக்காற்று வந்து தமிழ் பேசுமா
மழைச்சாரல் வந்து இசை பாடுமா

மலரோடு வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி


இடையோடு ரெண்டு கரம் சேர்க்கிறேன்
என்னென்னவென்று சரிபார்க்கிறேன்
இதழ் தேனை மெல்ல ருசிபார்க்கிறேன்
இடைவேளை  இல்லை தொடருவேன்(2)


கண்ணாளன் தீண்ட மடி சாய்கிறேன்
கண்ணோரம் காதல் பசி பார்க்கிறேன்
என் கூந்தல் பூக்கள் பரிமாறினேன்
இனி என்ன செய்வதறிகினேன்
இனியென்ன ம்ஹூம் ம்ஹூ
ஹூம்

மலைக்காற்று வந்து தமிழ் பேசுதே
மழைச்சாரல் வந்து இசை பாடுதே
மலரோடு வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி

சுந்தரி கண்ணால் ஒரு சேதி, Sundari kannal oru sedhi


--------------------------------------------------------------------------
படம் : தளபதி
பாடியவர்கள் : S.P.பாலசுப்பிரமணியம்,S.ஜானகி
இசை : இசைஞானி இளையராஜா
பாடல் வரிகள் :
கவிஞர் வாலி
--------------------------------------------------------------------------
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
நான் உனை நீங்கமாட்டேன்
நீங்கினால் தூங்கமாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே


சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி

என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
 



வாய்மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய்விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா
வாள்பிடித்து நின்றால்கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால்கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்
தேனிலவு நான் வாட ஏன் இந்த சோதனை
வானிலவை நீ கேளு கூறும் என் வேதனை
எனைத்தான் அன்பே மறந்தாயோ
மறப்பேன் என்றே நினைத்தாயோ



என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
 

நான் உனை நீங்கமாட்டேன்
நீங்கினால் தூங்கமாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே


சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி

என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
 


சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கீனால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் நானுன் மார்பில் தூங்கினால்

மாதங்களும் வாரம்  ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால்
கோடி சுகம் வாராதோ நீ எனைத்தீண்டினால்
காயங்களும் ஆறாதோ நீ எதிர்தோன்றினால்
உடனே வந்தால் உயிர் வாழும்
வருவேன் அந்நாள் வரக்கூடும்


சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
நான் உனை நீங்கமாட்டேன்
நீங்கினால் தூங்கமாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே


சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
 

Tuesday, 17 June 2014

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்


 -----------------------------------------------------
படம்    : பஞ்சவர்ணக்கிளி 
பாடகி  : P.சுசீலா  
இசை   : M.S.விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடல்  : கவிஞர் வாலி 
------------------------------------------------------

புன்னகை புரியும் கண்ணா வாடா
புல்லாங்குழலின் மன்னா வாடா
அழகே வாடா அருகே வாடா
அன்பே வாடா முத்தம் தாடா

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழல் எடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டூவான் (2)

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழல் எடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டூவான்  (2)


பச்சை வண்ணக்கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ண சிட்டு வந்து மலர் கொடுக்க

பச்சை வண்ணக்கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ணச்சிட்டு வந்து மலர் கொடுக்க
கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க
கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க

முத்தம் கொடுக்க முத்தம் கொடுக்க
தத்தி தத்தி நடக்கையில் மயில் போலே

திக்கி திக்கி பேசுகையில் குயில் போலே
கொஞ்சி கொஞ்சி எடுக்கையில் கொடி போலே 

அஞ்சி அஞ்சி விழுவாய்  மடி மேலே

ஆரிரோ ஆரிராரி ஆரிராரி  ஆராரோ
ஆரிரோ  ஆரிராரி ராரிராரி ராரிரோ
ஆரிராரி ராரிராரி ஆராரோ
ஆரிராரி ராரிராரி ஆராரோ 

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழல் எடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டூவான் (2)


உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்

உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்
ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான்
உண்மையை அதிலே உறங்க வைத்தான் 

உறங்க வைத்தான்  உறங்க வைத்தான்  

ஆரிரோ ஆரிராரி ஆரிராரி  ஆராரோ
ஆராரோ  ஆரிராரி ராரிராரி ராரிரோ
ஆரிராரிராரிராரி ஆராரோ
ஆரிராரிராரிராரி ஆராரோ

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழல் எடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டூவான் (2)

மல்லிகை என் மன்னன்,Malligai en mannan




 -----------------------------------------------------
படம்    : தீர்க்கசுமங்கலி
பாடகி  : வாணி ஜெயராம்
இசை   : M.S.விஸ்வநாதன் 

பாடல்  :கவிஞர் வாலி 
------------------------------------------------------

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ'(2)
எந்நேரமும் உன்னாசை போல் 
பெண் பாவை நான் பூச்சூடிக்கொல்லவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ

 வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல் (2)
திங்கள் மேனியை தொட்டு தாலட்டுது
குளிர் காற்றிலே தளிர்ப் பூங்கொடி 

கொஞ்சிப்  பேசியே அன்பை பாராட்டுது
என் கண்ணன் துஞ்சத்தான் 

என் நெஞ்சம் மஞ்சம் தான்
கையோடு நான் அள்ளவோ
என் தேவனே உன் தேவி நான் 

இவ்வேளையில் 
உன் தேவை என்னவோ  

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ.........

பொன் மாங்கல்யம் வண்ணப்பூச்சரம்
மஞ்சள் குங்குமம்  என்றும்  நீ தந்தது
ஓராயிரம் இன்பக்காவியம் 

 உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது
 நம் இல்லம் சொர்க்கம் தான் 

நம் உள்ளம் வெள்ளம் தான் 
 ஒன்றோடு ஒன்றானது
என் சொந்தமும் இந்த பந்தமும் 

உன்னோடு தான் நான் தேடி கொண்டது 

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ'
எந்நேரமும் உன்னாசை போல்
 பெண் பாவை நான் பூச்சூடிக்கொல்லவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ..........